"வாக்கு வங்கி அரசியலால் பின் தங்கியிருந்த சிறிய மாநிலங்களுக்கும் முக்கியத்துவம்" - பிரதமர் மோடி

வாக்கு வங்கி அரசியலால் இதுவரை பின் தங்கியிருந்த சிறிய மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
யூனியன் பிரதேசமான தாதர் நாகர் ஹவேலி, டையூ டாமன் ஆகிய பகுதிகளில் 4ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்து, சில்வாசா நகரில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்துவைத்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சுதந்திரமடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் தாதர் நாகர் ஹவேலி, டையூ டாமனில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கட்டப்படவில்லை என்று காங்கிரசை சாடினார்.
முன்னதாக சாலையில் இருமருங்கிலும் திரண்டிருந்த பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
Comments