பட்டுச்சேலை மட்டுமில்ல முடி நீளமா இருந்தாலும் பிடிச்சி இழுத்துக்குவோம்..! குடுமிப்பிடி சண்டை குமுதாக்கள்..!

0 1735

தள்ளுபடி விலையில் பட்டுச்சேலை வாங்க சென்ற இடத்தில் ஒரே சேலைக்கு இரு பெண்கள் தலைமுடியை பிடித்து இழுத்து மோதிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது..

தங்க நகைகள் மற்றும் பட்டுச்சேலைகள் மீது பெண்களுக்கு எப்போதுமே ஈர்ப்பு உண்டு எதுவும் அடுத்தவர் கையில் எடுத்து வைத்திருக்கும் அழகான புடவைகள் என்றால் கேட்கவே வேண்டாம்..! அப்படி ஒரு புடவைக்குத்தான் இந்த இரு பெண்களும் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளனர்

கர்நாடக பட்டு தொழிற்சாலை நிறுவனம் சார்பில் தலைநகர் பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியில் தள்ளுபடி விலை விற்பனை கண்காட்சி நடைபெற்றது. தள்ளுபடி விலை என்பதால் ஏராளமான பெண்கள் குவிந்தனர். மிகக் குறைந்த விலையில் பட்டுச்சேலைகள் கிடைத்ததால் கண்ணில் பட்ட சேலைகளை எல்லாம் பெண்கள் கையில் அள்ளிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரே சேலையை இரண்டு பெண்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இரண்டு பெண்களுக்கு இடையே முதலில் வாய் தகராறு ஏற்பட்டு புடவை பறந்தது.

இதையடுத்து ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர்

ஒரு பெண் மற்றொரு பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதால் அவர் நிலை குலைந்தார்

விற்பனை மையத்தில் இவ்வளவு களேபரங்கள் நடந்து கொண்டிருந்தாலும், மற்ற பெண்கள் யாரும் இந்தப் பிரச்சினை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் மலிவு விலையில் கிடைத்த சேலையை அள்ளி குவித்து கொண்டிருந்தனர்

பெண்கள் யாரும் இந்த குடுமிப்பிடிச் சண்டையை தடுக்க முன்வராததால் விற்பனை மையத்தில் இருந்த ஆண்கள் சிலர் சண்டையிட்ட இரு பெண்களையும் சமாதானப்படுத்தி பிரித்து விட்டனர்

தள்ளுபடி விலை சேலைக்காக பெண்கள் சண்டையிட்டுக்கொண்ட இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments