நடிகை ஷாலுவுக்கு டன்சோ பார்சலில் வந்தது மாயமான ஐபோன்..!

0 3606
நடிகை ஷாலுவுக்கு டன்சோ பார்சலில் வந்தது மாயமான ஐபோன்..!

சென்னையில் நண்பர் வீட்டில் தங்கி இருந்தபோது மாயமான, நடிகை ஷாலு ஷம்முவின் ஐபோன் 'டன்சோ' பார்சல் மூலமாக அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. இன்ஸ்டாகிராமில் சல்சா நடன வீடியோக்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருவதன் மூலம் அதிகளவில் பாலோயர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஷாலு ஷம்மு கடந்த 9ஆம் தேதி ஈஸ்டர் நாளில் எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு, பின்னர் சூளைமேட்டில் தனது நண்பர்களுடன் தங்கியபோது 2 லட்ச ரூபாய் மதிப்புடைய அவரது ஐபோன் காணாமல் போனதாக பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் சந்தேகத்துக்கு இடமான அவரது நண்பர்களை அழைத்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை ஷாலு ஷம்முவிற்கு உணவுப் பொருட்களை வீடுகளில் டெலிவரி செய்யும் டன்சோ நிறுவனத்திலிருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. ஆர்டர் செய்யாமல் வந்த பார்சலால் அதிர்ச்சியடைந்த ஷாலு ஷம்மு, அந்த பார்சலை பிரித்து பார்த்த போது, பேரிச்சம்பழம் பாக்ஸில் காணாமல் போன தனது ஐபோன் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.

காணாமல் போன 2 லட்ச ரூபாய் ஐபோன் மறுபடியும் கிடைத்த நிலையில், ஷாலு ஷம்மு இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஷேர் செய்துள்ளார். அதில், தான் திருடியதாக யாரை சந்தேகித்தேனோ அந்த நண்பர் தான் தனது ஐபோனைத் திருடியதாகவும், 8 வருட கால நட்பு வீண் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதன் பிறகு யாரை நம்புவது என தெரியவில்லை என நடிகை ஷாலு ஷம்மு பதிவிட்டுள்ளார்.

போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பயந்து ஐ போனை திருடிய நபர், சாமர்த்தியமாக உணவு பார்சல் போல ஷாலுவின் வீட்டிற்கு போனை அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments