அமெரிக்காவில் பிரபல திருநங்கை உரிமை போராளி ரஷிதா வில்லியம்ஸ் சுட்டுக்கொலை..!

0 1257

அமெரிக்காவில் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்தவரும் திருநங்கைகளின் உரிமைக்கு போராடியவருமான நடிகை ரஷிதா வில்லியம்ஸ் சுட்டுகொல்லப்பட்டார்.

கோகோ தா டால் என அழைக்கப்படும் ரஷிதா வில்லியம்ஸ் திருநங்கைகளின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கோகோமோ சிட்டி ஆவணப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

35 வயதான இவர், கறுப்பின திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், ரஷிதா வில்லியம்ஸ் சுட்டு கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் அட்லாண்டாவில் நடைபாதையில் கிடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவருடன் சேர்த்து இதுவரை 3 திருநங்கைகளின் மர்ம மரணம் பற்றி விசாரித்து வருவதாக அட்லாண்டா போலீசார் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments