"மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை".. அமைச்சர் உதயநிதி தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, அண்ணாமலை பதில் நோட்டீஸ்...

திமுக பிரமுகர்கள் மீதான சொத்துப் பட்டியல் விவகாரத்தில் தான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையே என்றும், அது தொடர்பாக இழப்பீடு வழங்கவும், மன்னிப்புக் கேட்கவும் முடியாது என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், திமுகவினர் தொடர்பாக தான் வெளியிட்ட தகவல்கள் பொதுவெளியில் உள்ளதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்துவதற்காக சொத்து பட்டியலை வெளியிடவில்லை என்றும், பொதுமக்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் அண்ணாமலை விளக்கமளித்தார்.
Comments