இராணுவ வீரர்கள் 5 வீரர்கள் பலியான சம்பவம்.. பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது அம்பலம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பற்றி எரிந்து 5 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தில் அது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது.
ரஜோரி பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்த வாகனம் மதியம் 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அதில் 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்ததால், மின்னல் தாக்கி தீப்பிடித்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் வானிலையை தங்களுக்குச் சாதமாக்கி, பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments