ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஆளில்லா ட்ரோனை தயாரிக்க சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்..!

0 1368

ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும்  ஆளில்லா உளவு விமானத்தை தயாரிக்க சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் ரகசிய ஆவணத்தை மேற்கோள் காட்டி இந்த தகவல் கசிந்துள்ளது .இந்த ஆவணம் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதியிட்ட செயற்கைக் கோள் படங்களை காட்டுகிறது.

அங்கு wz-8 ராக்கெட் உந்துதல் உளவு ட்ரோன்கள் கிழக்கு சீனாவில் உள்ள ஒரு விமான தளத்தில் காணப்படுகின்றன. கடந்த வாரம் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக கைது செய்யப் பட்டுள்ள மாசாசூசெட்ஸ் விமான தேசிய காவலர், இந்த கோப்புகளையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments