RECENT NEWS

கையில் பட்டா கத்தியுடன், இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவேற்றியவர் கைது

முகப்பு

விமான விபத்து எதனால் நடந்திருக்கும்? - மூத்த விஞ்ஞானிகள் கருத்து

Jun 13, 2025 01:39 AM

898

விமான விபத்து எதனால் நடந்திருக்கும்? - மூத்த விஞ்ஞானிகள் கருத்து

விமான விபத்து

விபத்துக்குள்ளான விமானத்தின் லேண்டிங் கியர் உட்செலுத்த கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக மூத்த விமானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமான விபத்துக்கு முந்தைய காட்சிகளைப் பார்க்கும்போது சில முரண்பாடுகள் இருப்பதாகவும், மேல்நோக்கி இருக்க வேண்டிய லேண்டிங் கியர் கீழ்நோக்கி இருப்பதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸின் முன்னாள் விமானி அலெஸ்டர் ரோசன்ஷெய்ன் குறிப்பிட்டார்.

குறைந்த வேகத்தில் விமானம் புறப்பட்டு திறம்பட பறக்க உதவும் வகையில், இறக்கை மடிப்புகள் சரியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அலெஸ்டர் தெரிவித்தார்.

ஓடுபாதையில் விமானத்தின் புறப்பாடு அசாதாரண நிலையில் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் முன்னாள் விமானி லாரா சாவினோ தெரிவித்தார்.

விமானத்தின் மூக்குப்பகுதி 15 டிகிரி உயரத்தில் மேல்நோக்கி செல்ல வேண்டும் என்றும், அதில் சிரமம் இருப்பது போல் வீடியோ காட்சிகளில் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லேண்டிங் கியர் வழக்கத்தைவிட சற்று நேரம் கீழே இருந்ததாக மற்றொரு பிளைட் ரேடார் இயக்குநர் ஐயன் பெச்சனிக் தெரிவித்தார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies