தேர்வில் பார்த்து எழுதியது குற்றமா ? உரிமைக்குரல் எழுப்பிய எஸ்.எப்.ஐ தம்பியை நெம்பிய பேராசிரியர்கள்..! காமராஜ் கல்லூரியில் கலாட்டா..!

0 3063

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்களுக்கு ஆதரவாக, பேராசிரியர்களிடம் உரிமைக்குரல் எழுப்பிய எஸ்.எப்.ஐ மாணவரை ஆபீஸ் ரூமில் அடைத்து வைத்து கும்மி எடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாமர்த்தியமாக பார்த்து எழுதியவர்கள் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்களுக்கு ஆதரவாக பேசியதால் ஆபீஸ் ரூமுக்கு அழைத்துச்சென்று கும்மி எடுக்கப்பட்ட எஸ்.எப்.ஐ தோழர் நேசமணி இவர் தன்..!

தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோட்டில் காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது . இருபாலர் பயிலக்கூடிய இந்த கல்லூரியில் விஸ்காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு புதன்கிழமை இன்டெர்னல் தேர்வு வகுப்பறையில் வைத்து நடத்தப்பட்டது.

தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குரிய பதில் , கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் பாடம் எடுத்த போது கரும்பலகையில் எழுதிய நிலையில் அப்படியே இருந்துள்ளது . இதைத் தொடர்ந்து தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் சாமர்த்தியமாக தேர்வுக்கான விடையை கரும்பலையை பார்த்து எழுதியுள்ளனர்

இந்த சம்பவம் தேர்வு முடிந்த பின்பு பேராசிரியர்களுக்கு தெரியவர சம்பந்தப்பட்ட பேராசிரியர் மாணவர்களை சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. அங்கிருந்த மாணவர்களோ, கரும்பலகையில் உள்ள விடையை அழிக்காமல் அப்படியே வைத்திருந்தது பேராசிரியரின் தவறு அதற்கு , மாணவர்கள் எப்படி பொறுப்பாக முடியும் எனவும் கேள்வி கேட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு ஆதரவாக எஸ்.எப்.ஐ யில் பொறுப்பில் உள்ள மாணவர் நேசமணி என்பவர் பேராசிரியர்களிடம் குரலை உயர்த்தி பேசி உள்ளார்.

இதையடுத்து பேராசிரியர்களான சுரேஷ் மற்றும் சீனிவாச மணிகண்டன் ஆகியோர் மாணவர் நேசமணி என்பவரை தனியாக ஆமீஸ் ரூமுக்கு அழைத்துச் சென்று கும்மி எடுத்ததாக கூறப்படுகிறது

இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறி மாணவர் நேசமணி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர சக மாணவர்களுடன் ஊர்வலமாக வந்தார்

தெம்பாக நடந்து வந்து பேட்டி அளித்த நேசமணி சிறிது நேரத்தில் உடல் நிலை சரியில்லை என்று அரசு மருத்துவமனைக்குள் சென்று படுத்துக் கொண்டார். தேர்வில் பார்த்து எழுதுவதே தப்பு அதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக மாணவர்களை கூட்டி வந்து பிரச்சனை செய்ததால் சத்தம் போட்டதாகவும் ஆனால் தாங்கள் தாக்கிவிட்டதாக கூறி அவர் புகார் தெரிவித்து இருப்பதாகவும் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments