சென்னை நொச்சிகுப்பம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம்!

0 1342

சென்னை நொச்சிகுப்பம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் காவல் ஆணையர் மற்றும் 14 மீனவர்கள் பங்கேற்றனர்.

2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் அரசு மற்றும் மீனவர்கள் தரப்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. வாரஇறுதி நாட்களில் மட்டும் விற்பனை செய்யுமாறு அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்து பிறகு பதில் தெரிவிப்பதாக மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments