என் பொண்டாட்டி வரா.. நீ என்ன ஆகிறங்கிறத மட்டும் பாரு.. போலீஸை கோர்த்துவிட்ட குடிகாரர்..!

0 7981

சென்னையில் வாகன சோதனையின் போது மதுபோதையில் பிடிபட்ட கணவனை விடுவிக்க போலீசாரிடம் மல்லுக்கட்டிய பெண், உதவி ஆய்வாளரை ஒருமையில் ஏசியும், தொப்பியை வீசியும் தாக்குதல் நடத்தியதால் கணவருடன் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்..

சூளைமேடு போலீஸார் நெல்சன் மாணிக்கம் ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது..

அங்கிருந்த போலீசார் மதுபோதையில் உள்ளார்களா என பிரீத் அனலைசர் மூலமாக சோதனை செய்ய முற்பட்ட போது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்திற்கான ஆவணங்களை போலீசார் கேட்ட போது அந்த இருசக்கர வாகனம் தன்னுடைய உறவினருடையது எனவும் கூறியுள்ளனர். மேலும் ஆவணம் வீட்டில் உள்ளதாக கூறி செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு தங்களை போலீசார் பிடித்து விட்டதாகவும், உடனே சம்பவயிடத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த பெண் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தனது கணவர் என்றும் போனில் பேசி கொண்டிருந்த போது திருட்டு வண்டியா எனக்கேட்டதை சுட்டிகாட்டி ஆபாச வார்த்தைகளால் உதவி ஆய்வாளரை வசைப்பாடியுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த காவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, நாற்காலி மீதிருந்த போலீஸ்காரரின் தொப்பியையும் அவர் மீது தூக்கி எறிந்து காவலரையும் தாக்க முற்பட்டார்.

இந்த சம்பவத்தில் காவலர் வெள்ளை துரை அளித்த புகாரின் பேரில் போலீசாரை வசைபாடிய பெண் அக்சயா அவரது கணவர் சத்யராஜ் மற்றும் வினோத்குமார் ஆகிய 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments