தாதா ஆதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்.. கொலையாளிகளின் பின்னணி குறித்த தகவல் வெளியீடு..!

0 3544

உத்தரப்பிரதேசத்தில் 5 முறை எம்.எல்.ஏ மற்றும் எம்.பியாக இருந்ததோடு, தாதாவாகவும் வலம் வந்த ஆதிக் அகமதுவையும் அவரது சகோதரையும் செய்தியாளர்கள் வேடத்தில் சென்று சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மூவரின் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கைதான 3 பேரில் "லவ்லேஷ் திவாரி" எளிமையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவன் என்றும் அவனது சகோதரர்கள் இருவர் கோயில் பூசாரிகளாக உள்ளனர் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. லவ்லேஷ் மட்டும் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாகி, ரௌடிகளுடன் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தான் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு நபரான "மோஹித்" என்கிற "சன்னி", சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவன் என்றும் அவன் மீது 17 வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

3வது நபரான "அருண் மௌரியா" சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, உடன் பிறந்த சகோதரனைப் பிரிந்து 10 ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போனவன் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments