ஈஸ்டரை முன்னிட்டு ரஷ்யா - உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம்..!

0 2018

ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்ற கைதிகள் பரிமாற்றத்தில், 130 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினர்.

14 மாதங்களுக்கு மேலாக போர் நீட்டித்து வரும் நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகள் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி போரில் சிறைபிடிக்கப்பட்ட கைதிகள் பரிமாற்றத்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ஈஸ்டரை முன்னிட்டு, தேசிய பாதுகாப்பு படை, ராணுவம், மாலுமிகள் என 130 உக்ரைன் வீரர்களை ரஷ்யா விடுவித்துள்ளது. அதற்கு ஈடாக உக்ரைனில் இருந்து எத்தனை வீரர்கள் அனுப்பப்பட்டனர் என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments