பொருளாதார நடவடிக்கைகளால் நாட்டின் மின் தேவை 9.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு

நாட்டில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் மின்தேவையும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்தாண்டில் ஆயிரத்து 374 பில்லியன் யூனிட்களாக இருந்த மின்நுகர்வு நடப்பாண்டில், 9 புள்ளி 5 சதவீதம் அதிகரித்து, சுமார் ஆயிரத்து 504 பில்லியன் யூனிட்களாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி தேவையும் 207 புள்ளி 23 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ள நிலையில், கோடைக்காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அனல் மின்நிலையங்களிலும் தேவையான நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Comments