"மக்களுக்காக போலீசார் மகிழ்ச்சியாக உழைக்க வேண்டும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காவல்துறையினர் மகிழ்ச்சியாக உழைத்தால் தான் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க முடியும் என்பதால், சென்னையில் காவல்துறையினருக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மகிழ்ச்சி திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்தப்பட வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற, சென்னை பெருநகர காவல்துறையின் மகிழ்ச்சி திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன், மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு, வரும் 19 ஆம் தேதி பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Comments