ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீச்சு..!

ஜப்பானில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உரை நிகழ்த்திக்கொண்டிருந்த இடத்தின்அருகே வீசப்பட்ட பைப் வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அந்நாட்டின் வாகயாமாவில் உள்ள சைகசாகி மின்பிடி துறைமுகத்தின்அருகே பிரதமர் ஃபுமியோ கிஷிடா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வீசப்பட்டது.
வெடிசத்தம் கேட்டதையடுத்து, பிரதமரை அவரது பாதுகாவலர்கள் அங்கிருந்து மிகுந்த பாதுகாப்புடன் கூட்டிச் சென்றனர்.
இது தொடர்பாக ஒருவரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார், குண்டுவீசியது ஏன், எங்கிருந்து வெடிபொருள் கிடைத்தது என்பன குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Comments