செல்போன் பயன்பாட்டை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை.. இறந்த செய்தி கேட்டு தாயும் விஷம் குடித்து விபரீத முடிவு..!

கரூர் அருகே அதீத செல்போன் பயன்பாட்டை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகன் இறந்த செய்தி கேட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சுண்டுகுளிப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ், சுமதி தம்பதியரின் மகன்செல்வராஜ். 23 வயதான செல்வராஜ் எந்த வேலைக்கும் செல்லாமல் அதிக நேரம் செல்போனில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை தனது தந்தை கண்டித்ததால் மனமுடைந்த செல்வராஜ் அந்த பகுதியிலுள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகன் இறந்த தகவல் அறிந்து, வேதனையில் தாய் சுமதி விஷம் அருந்தியுள்ளார். மயங்கி விழுந்த சுமதி முதலுதவிக்குப் பிறகு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Comments