பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் மரணம்.. ராணுவ மரியாதையுடன் உடலை அடக்கம் செய்யக்கோரி போராட்டம்..

0 1021
பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

கடந்த 12ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சேலத்தைச் சேர்ந்த கமலேஷ் என்பவரும், தேனியைச் சேர்ந்த யோகேஷ் குமார் என்பவரும் உயிரிழந்தனர்.

வீரர் யோகேஷ் குமாரின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து அவரது சொந்த ஊரான தேனி மூனாண்டிபட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வீரர் கமலேஷின் உடல் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவரது சொந்த ஊரான சேலம் வனவாசி அருகே உள்ள பனங்காடு பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இந்நிலையில், ராணுவ மரியாதையுடன் வீரர்களது உடலை அடக்கம் செய்யக் கோரி உறவினர்களும், கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ மரியாதை வழங்காவிடில் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments