''வேறு யாருடைய சொத்தையோ திமுகவினரின் சொத்து போல் அண்ணாமலை கூறுகிறார்..'' - ஆர்.எஸ்.பாரதி..!

வேறு யாருடைய சொத்தையோ திமுகவினருக்குச் சொந்தமானது போல் அண்ணாமலை தெரிவிப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் அவர் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், ரபேல் வாட்ச் குறித்து அண்ணாமலை வெளியிட்டது ஒரிஜினல் பில் அல்ல, வெறும் சீட்டுதான் என்றும், திமுகவினரின் சொத்து பட்டியல் எனக்கூறி வெளியிடப்பட்டதற்கான ஆவணங்களை 15 நாட்களில் அவர் வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், முதலமைச்சர் மீதான 200 கோடி ரூபாய் லஞ்ச புகாரில் உண்மையில்லை என குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, ஆதாரம் இருந்தால் சிபிஐ.யிடம் அண்ணாமலை வழங்கலாம் என்றும் விளக்கமளித்தார்.
Comments