லஞ்ச பணத்தை அருகில் உள்ள வாழை மரங்களில் போலீசார் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் அம்பலம் ..!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கனரக மற்றும் கால்நடைகளை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டிகளிடம் பெற்ற லஞ்ச பணத்தை அருகில் உள்ள வாழை மரங்களில் போலீசார் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழக-கேரளா எல்லையான நடுப்புனி சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவிற்கு செல்கின்றன.
வாகன ஓட்டிகளிடம் சோதனையில் ஈடுபடும் போலீசார் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி நடுப்புனி சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்த வாழை மரம் மற்றும் அலுவலக மேற்கூரையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்தனர். 8 ஆயிரத்து 900 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், அலுவலக உதவியாளர் விஜயகுமார், லைவ் ஸ்டாக் ஆய்வாளர் ஷாஜி, கள அலுவலர் அசோகன் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற பணத்தினை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
Comments