காவல்நிலையத்தில் நடந்த கலாட்டா கல்யாணம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்..!

0 7388

திருச்சி காவல்நிலையத்தில், காதலை எதிர்த்த பெற்றோர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போதே காதலன் தன் காதலிக்கு தாலி கட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

12ம் வகுப்பு படித்துவிட்டு டிரைவராக பணிபுரிந்து வரும் அர்ஜூன் என்ற இளைஞரும், பி.எட் படித்து வரும் சிவசங்கரி என்ற இளம்பெண்ணும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே, இரு வீட்டாருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்த இரு குடும்பத்தினரும் போலீசார் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சமயம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அர்ஜூன், சிவசங்கரி கழுத்தில் தாலி கட்டியுள்ளார். செய்வதறியாது திகைத்த பெண்ணின் பெற்றோர் சத்தமிட்டு கூச்சலிட்டனர்.

ஒரு கட்டத்தில் பெண்ணின் பெற்றோர் தங்களது மகளே தேவை இல்லை எனக் கூற, இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments