கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் ஹரிபத்மனுக்கு ஜாமீன் மறுப்பு..!

கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் கைதான நடன ஆசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை தரப்படுவதாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில், ஹரிபத்மன் கைதானார்.
இந்நிலையில், ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்ததை ஏற்று, மனுவை நீதிபதி மோகனாம்பாள் தள்ளுபடி செய்தார்.
இதனிடையே, பாலியல் தொல்லை தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினர். கல்லூரி இயக்குனர் ரேவதி, துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்றது.
Comments