ரஷ்யாவில் குமுறி வரும் 'ஷிவிலுச்' எரிமலை.. 32,000 அடி உயரத்திற்கு வெளியேறிய சாம்பல் துகள்கள்..!

ரஷ்யாவில் குமுறிவரும் ஷிவிலுச் எரிமலை, வானில் 32 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் துகள்களை வெளியேற்றியது.
ஒரு லட்சத்து 8000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சாம்பல் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், கம்சட்கா (Kamchatka) தீபகற்பம் வழியாக விமானங்களை மிகவும் கவனமாக இயக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மூன்றரை இன்ச் தடிமனில் சாம்பல் போர்த்தியுள்ளது.
எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீ பிழம்புகளால் பனிமலைகள் உருகி மண்சரிவு நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Comments