காவல்துறை எஸ்.பி-யை குறிவைத்து குண்டுவெடிப்பு.. 2 போலீசார், உள்பட 4 பேர் உயிரிழப்பு..!

0 1404

பாகிஸ்தானில், போலீஸ் எஸ்.பி.-யை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

குவெட்டா நகரில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் எஸ்.பி. யின் கார் அருகே 5 கிலோ வெடிமருந்து நிரப்பப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவைத்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அதனை பயங்கரவாதிகள் வெடிக்கச்செய்தனர்.

போலிஸ் எஸ்.பி. அதிர்ஷ்டவசமாக தப்பித்த நிலையில், அவரது கார் ஓட்டுநரும், பாதுகாவலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு சிறுமி உள்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.

15 பேர் காயமடைந்தனர். குவெட்டா நகரில், கடந்த 24 மணி நேரத்தில் போலீசார் மீது பலோசிஸ்தான் பிரிவினைவாதிகள் 2 முறை தாக்குதல் நடத்தியதில் 4 போலீசார்  உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments