மொட்டை வெயிலில் போதையில் ‘சன் பாத்’.. சரக்கு சரோஜா ரகளை..! இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ ?
பொள்ளாச்சியில் போதை பெண் ஒருவர் சாலையில் படுத்து உருண்டு அரசு பேருந்தை மறித்து செய்த அலப்பறைகளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அடிக்கிற வெயிலில் வெறுங்காலில் நடக்க அஞ்சிவோர் மத்தியில், அசால்ட்டா தார் சாலையில் மல்லாக்க படுத்து சூரியனுக்கு டஃப் கொடுத்த குடிகாரமகள் இவர்தான்..!
திருப்பூர் மாவட்டம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த மகேஷ் என்ற பெண், கணவரை இழந்ததால் மது போதைக்கு அடிமையாகி உள்ளார். சம்பவத்தன்று திருப்பூரிலிருந்து பொள்ளாச்சிக்கு வந்த மகேஷ், பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மக் கடைக்கு சென்று மூக்கு முட்ட மது அருந்திவிட்டு சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார்
அங்கு திரண்ட பொதுமக்களும் , போலீசாரும் அவரை அங்கிருந்து எழுந்து செல்ல வைத்த அடுத்த நொடி, போக்குவரத்து சரி செய்ய போகிறேன் என்று சாலையில் செல்லும் வாகனங்களை மறிக்க தொடங்கினார்
தனக்கு எதிரே வந்த அரசு பேருந்து ஒன்றை ஓடிச்சென்று மறித்ததால், ஓட்டுனர் உடனடியாக பிரேக் அடித்ததால் அந்த மப்பு மந்தாகினி பேருந்துக்குள் சிக்காமல் தப்பினார். சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் அந்த பெண்ணை பாப்பா வெளியே வாம்மா என்று கரிசனத்துடன் அழைக்க , சாலையில் நின்று டான்ஸ் போட்டது அந்த குடிகார பாப்பா
அங்குமிங்கும் தறிகெட்டு ஓடிய அந்த சரக்கு வண்டியை ஒரு வழியாக பிடித்து சாலையோரம் உட்கார வைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் இந்த பெண் செய்த சேட்டைகளை பார்த்த சிலர் , என்ன பிராண்ட் சரக்கை குடிச்சிருக்கும் ? என்று வேடிக்கையாக பேசிச்செல்ல, மதுவுக்கு அடிமையானதால் அந்தப்பெண் இந்த இழி நிலைக்கு தள்ளப்பட்டதாக பலர் தலையில் அடித்துக் கொண்டு சென்றனர்.
Comments