நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு சிறப்பு ஒத்திகை..!

0 1669

கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இன்றும் நாளையும் கொரோனா தடுப்பு சிறப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன், மருந்துகளின் கையிருப்புகளை உறுதி செய்யும் விதமாக 2 நாட்கள் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, கொரோனா தடுப்பு தயார் நிலை ஒத்திகையை பார்வையிட உள்ளார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டுநாள் ஒத்திகையின்போது மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை உறுதி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments