தமிழகம் முழுவதும் ஒரே நாளில், மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த 7 போலி மருத்துவர்கள் கைது..!

தமிழகத்தில் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்த 7 போலி மருத்துவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் உத்தரவின்படி நடைபெற்ற சோதனையில்,கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டை சேர்ந்த குணசேகர், புதுநகரை சேர்ந்த மதியழகன், கொய்யாதோப்பு தெருவை சேர்ந்த காந்தரூபன் கரும்பூரை சேர்ந்த சத்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேலச்சேரி கிராமத்தில் மெடிக்கல் வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த மனோகர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதே புகாரில் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த வி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம்,மற்றும் தெலுங்கர் தெரு பகுதியைச் சேர்ந்த தேவராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments