2 மனைவிகளை கைவிட்டு, 3வது பெண்ணுடன் காவல் ஆய்வாளர் உல்லாசம்.. கையும் களவுமாக மடக்கிய "மனைவிகள்"

0 4649

ஆந்திர மாநிலம் நெல்லூரில் அடுத்தடுத்து 2 பேரை திருமணம் செய்துவிட்டு, இருவருக்கும் தெரியாமல் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளரை அவரது இரண்டு மனைவிகளும் சேர்ந்து சென்று கையும் களவுமாகப் பிடித்து தாக்கினர்.

நெல்லூர் ஆயுதப்படையில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் வாசு என்பவர், 30 ஆண்டுகளுக்கு முன் சாம்ராஜ்ஜியம் என்பவரை திருமணம் செய்து, 2 பிள்ளைகளோடு அவரை கைவிட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு மௌனிகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

அந்த மௌனிகாவுக்கும் தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருப்பது முதல் மனைவி சாம்ராஜ்ஜியத்துக்குத் தெரியவந்துள்ளது. பகையை மறந்து மௌனிகாவிடம் இதனை தெரிவித்த சாம்ராஜ்ஜியம், அவரையும் உறவினர் சிலரையும் அழைத்துக்கொண்டு அந்த 3வது பெண் வீட்டுக்குச் சென்று கையும் களவுமாக சிக்கிய கணவனை வாங்கு வாங்கு என வாங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments