பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை 20 கி.மீ தூரம் ஜீப்பில் சென்று பார்வையிட்டார் பிரதமர் மோடி

0 1568
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை 20 கி.மீ தூரம் ஜீப்பில் சென்று பார்வையிட்டார் பிரதமர் மோடி

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி, ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதியினரை சந்தித்தார்.

காலை மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பந்திப்பூர் வந்த பிரதமர், கார் மூலம் புலிகள் காப்பகத்திற்கு சென்றார். பந்திப்பூர் சரணாலயத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 20 கிலோமீட்டர் ஜீப்பில் பயணித்து வனவிலங்குகளை பார்வையிட்டார்.

பின்னர் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற பிரதமர், யானைகளுக்கு உணவளித்து பொம்மன் பெள்ளி தம்பதியை சந்தித்தார். 

தொடர்ந்து மசினகுடிக்கு சென்ற பிரதமர், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து கையசைத்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் மைசூரு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments