டெல்லியில், ஓடும் பேருந்தில் பயணிகளை மிரட்டி கொள்ளை முயற்சி - ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது
டெல்லியில், ஓடும் பேருந்தில் பயணிகளை மிரட்டி கொள்ளை முயற்சி - ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது
டெல்லியில், ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆனந்த் விஹார் ரயில்நிலையத்தில் இருந்து காஷ்மீரி கேட் நோக்கி சென்று கொண்டிருந்த மினி பேருந்தில், பயணிகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சாஸ்திரி பார்க் மேம்பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விரைந்து சென்று பேருந்தை மடக்கிபிடித்தனர்.
ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச்சென்று வழியில் அவர்களது பணத்தை, பேருந்து ஓட்டுநர் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் மிரட்டி கொள்ளையடித்தது தெரியவந்தது. பேருந்தில் இருந்த பயணிகளிடம் வாக்கு மூலங்கள் பதிவுசெய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து மினி பேருந்தை பறிமுதல் செய்தனர்.
Comments