நடுக்கடலில் ஆந்திர - தமிழக மீனவர்கள் இடையே மோதல்..!

0 1039

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தமிழக மீனவர்களின் படகில் சிக்கி ஆந்திர மீனவர்களின் வலை அறுந்ததாகக் கூறப்படும் நிலையில், நடுக்கடலில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

கடலூரைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆந்திர எல்லையான இசக்கப்பள்ளி மீனவ கிராமம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மீனவர்கள் விரித்திருந்த வலை தமிழக மீனவர்களின் படகில் சிக்கி அறுந்ததாகக் கூறப்படுகிறது.

எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக ஏற்கனவே தமிழக மீனவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்த ஆந்திர மீனவர்கள், வலை அறுந்ததை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், தமிழக மீனவர்கள் தாக்கியதில் ஆந்திர மீனவர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கரைக்குச் சென்ற ஆந்திர மீனவர்கள், கட்டைகள், சோடா பாட்டில், கற்கள் ஆகியவற்றை படகுகளில் ஏற்றிக்கொண்டு மீண்டும் கடலுக்குள் சென்றனர். தகவல் அறிந்து கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து சென்று சமாதானம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments