பிரதமர் வருகையை முன்னிட்டு - நாளை சென்னையில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள்...!

நாளை சென்னை வரும் பிரதமர் மோடி சென்னையில் 4 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
இதனால் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக செல்லும் வழி, விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
ஐஎன்எஸ் அடையார் முதல் சென்ரல் ரயில் நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் போக்குவரத்தில் மாற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் செண்ட்ரல் ரயில் நிலையம் வழியாக செல்லும் வணிக வாகனங்கள் அண்ணா ஆர்ச் முதல் தீவுத்திடல் அருகேயுள்ள முத்துசாமி பாலம் சந்திப்பு வரை அனுமதிக்கப்படாது எனவும், அதற்கான மாற்று வழிகள் குறித்தும் போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
Comments