திருப்பதியில் மதுகேட்டு தற்கொலை மிரட்டல்... மீட்கச் சென்ற காவலரும் இளைஞரோடு கீழே விழுந்து காயம்..!

திருப்பதி கோயிலில் குடிப்பதற்கு மது கேட்டு சுவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை மீட்கச் சென்ற காவலர், மிரட்டல் விடுத்த இளைஞரோடு சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.
குஜராத் மாநிலம், ஜகிராபாத்தை சேர்ந்த மகேஷிற்கு தீவிர மதுபழக்கம் இருக்கும் நிலையில், அவரை குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்கு அழைத்து வந்துள்ளனர்.
கோயிலுக்கு வந்ததிலிருந்து மது கிடைக்காமல் திணறி வந்த மகேஷ் திடீரென லேபாச்சி சர்க்கிள் அருகே உள்ள சுவற்றின் மீது ஏறி மது வாங்கி கொடுத்தால் மட்டுமே இறங்குவேன், இல்லையென்றால் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
அங்கிருந்த காவலர் ஒருவர் சுவரில் ஏறி அவரை கீழே இறங்க வைக்க முயற்சித்த போது 2 பேரும் திடீரென்று அங்கிருந்து தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தனர்.
Comments