குடியரசு தலைவரிடம் பத்மஸ்ரீ விருது பெற்றார் இசையமைப்பாளர் கீரவாணி..!

0 1326

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் கலை சேவையை பாராட்டி அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதினை, அவரது சகோதரி உமா பெற்றுக்கொண்டார். அதேபோல் சிறந்த சமூகசேவைக்காக வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதினை பாலம் கல்யாணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

மறைந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவிற்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை, அவரது மகன் அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, சமூகசேவைக்காக எழுத்தாளர் சுதா மூர்த்திக்கு பத்மபூஷன் விருதும், நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த கீரவாணி மற்றும் சூப்பர் 30 கல்வி திட்டத்தின் நிறுவனர் ஆனந்த் குமார், நடிகை Raveena Tandon உட்பட பலருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கி குடியரசுத்தலைவர் கெளரவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments