இந்தியா-ரஷ்யா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது - சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்!

இந்தியா-ரஷ்யா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
புதிய வெளியுறவுக் கொள்கையை வெளியிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், சீனா மற்றும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த இராஜாங்க ரீதியாக முன்னுரிமை அளிக்கப்படுமென தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, கருத்து தெரிவித்திருந்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் பெரும் சக்திகளாக வளர்ந்து வருகின்றன,
எனவே, இருநாடுகளுக்கிடையேயான உறவுகளை அதிகரிக்க பெய்ஜிங் தயாராக உள்ளதாக கூறினார். சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் ஆழ்ந்த சிக்கலான மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் சர்வதேச சமூகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் சீனா தயாராக உள்ளதாகவும் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
Comments