வந்தே பாரத் ரயில் ஒட்டிய இந்தியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ்..!

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், வந்தே பாரத் ரயிலை ஓட்டிய வீடியோவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் அந்த ரயில், இந்தியாவின் மிக வேகமான ரயிலாகவும், சொகுசு ரயிலாகவும் கருதப்படுகிறது.
அந்த ரயிலை மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் இருந்து சோலாப்பூர் ரயில் நிலையம் வரை சுரேகா யாதவ் செலுத்தினார்.
இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் இந்திய ரயில்வே பகிரவே, அதை பார்வையிட்ட பலரும், சுரேகா யாதவை கண்டு அனைவரும் பெருமைபடுவதாகவும், பெண் சக்திக்கு வணக்கம் என்றும் பதிவிட்டுள்ளனர்.
Comments