கட்டுமானப்பணி தாமதத்தை சுட்டிக்காட்டி, ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்துக்கொண்ட ஆட்சியர்..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், கட்டுமானப்பணி தாமதத்தை சுட்டிக்காட்டி, ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்துக்கொண்டார்.
ஆட்சியர் சாருஸ்ரீ, எம்எல்ஏ மாரிமுத்து ஆகியோர் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்திற்கான கட்டுமானப்பணியை திட்ட அறிக்கையோடு ஆய்வு செய்தனர்.
அப்போது, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட பணி நடப்பாண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டிய நிலையில், பணி தாமதத்திற்கேற்ப அபராதம் விதிக்கப்படுமென ஆட்சியர் அப்போது எச்சரித்தார்.
Comments