ஈரோடு, தாளவாடியில் முட்டைகோஸின் கொள்முதல் விலை குறைந்தது - விவசாயிகள் வேதனை..!

ஈரோடு, தாளவாடியில் முட்டைகோஸின் கொள்முதல் விலை குறைந்தது - விவசாயிகள் வேதனை..!
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிலோ முட்டைகோஸின் கொள்முதல் விலை இரண்டு ரூபாயாக குறைந்ததால் கடுமையான நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகளிடம் இருந்து இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகோஸ் வெளிமார்க்கெட்டில் பத்து முதல் இருபது ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முட்டைக்கோஸ் சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Comments