தங்கள் வான்பரப்பிலும் மர்ம பலூன் பறந்து சென்றதாக ருமேனியா அறிவிப்பு

0 1231

தங்கள் நாட்டு வான்பரப்பிலும் சந்தேகத்திற்கு இடமான பொருள் பறந்து சென்றதாக ருமேனியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ருமேனியாவின் தென்கிழக்குப் பகுதியில் விமானப்படையின் கண்காணிப்பு அமைப்பில் மர்மமான பலூன் ஒன்று தென்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

அந்த பலூன் சுமார் 11 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்ததாகவும், அதனை இரண்டு MiG 21 LanceR ஜெட் விமானங்கள் விரட்டிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் 10 நிமிடங்களில் அந்த பலூன் அமைப்பு மறைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments