துருக்கி நிலநடுக்கம்.. இடிபாடுகளில் இருந்து போராடி மீட்கப்பட்ட பெண் உயிரிழந்த செய்தியறிந்து கண்கலங்கிய மீட்புக் குழுவினர்

0 1737

துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து போராடி மீட்கப்பட்ட 40 வயதான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து, ஜெர்மனி மீட்புக் குழுவினர் கண்கலங்கினர்.

கிரிகான் நகரில் நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடத்திற்கிடையே 104 மணி நேரமாக சிக்கியிருந்த பெண்ணை வெள்ளிக்கிழமை ஜெர்மனி மீட்புக் குழுவினர்உயிருடன் மீட்டனர்.

அந்த பெண் உயிரிழந்துவிட்டதை அவரது குடும்பத்தினர் வாயிலாக அறிந்த ஜெர்மனி மீட்புக் குழு தலைவர், அந்த செய்தியை தனது குழுவினருடன் பகிர்ந்த போது சில மீட்புப் பணியாளர்கள் கண் கலங்கினர். பின்னர், ஒருவரையொருவர் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments