ஈரோடு கிழக்கு தேர்தலில் தங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

0 2561

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

இடைத்தேர்தல் குறித்து சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இரட்டை இலைச்சின்னம் முடக்கப்படக்கூடாது என்ற நோக்கில், தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். மேலும், இடைத்தேர்தலில், பொதுக்கூட்டங்கள் வாயிலாக ஓபிஎஸ் பரப்புரை மேற்கொள்வார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments