அபுதாபியில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தீப்பொறி பறந்ததால் அதிர்ச்சி

0 1418

அபுதாபியில் இருந்து கேரளமாநிலம் கோழிக்கோடுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

எஞ்சினில் ஏற்பட்ட பழுதுகாரணமாக விமானத்தில் தீப்பொறி பறந்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் அபுதாபிக்கே திரும்பி வந்து விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இதனால் விமானத்தில் இருந்த 184 பயணிகள் பெரும் ஆபத்தில் இருந்து உயிர் தப்பினர். பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments