புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டை மழைத் தூறலுக்கு மத்தியிலும் ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழத்தானியத்தில் உள்ள காட்டு அய்யனார் கோயிலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை மழைத் தூறலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
போட்டியில் பங்கேற்க புதுக்கோட்டை மட்டுமன்றி திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்தும் 600 காளைகள் கொண்டுவரப்பட்டன. காளைகளை பிடிக்க 300 மாடுபிடி வீரர்கள் 6 சுற்றுகளாக பங்கேற்றனர்.
Comments