விமான நிலையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமல்..!
சீனாவில், உருமாறிய கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.
சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது.
சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் பிஎப்.7 எனும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டதால் கொரோனா நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பன்னாட்டு விமான நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் விமான நிலைய இயக்குநர்களுக்கு கடிதமாக அனுப்பியுள்ளார்.
அதில்,சென்னை, கோவை, மதுரை , திருச்சி ஆகிய 4 விமான நிலையங்களுக்கும் வரும் பயணிகள் கோவிட் தடுப்பூசி தவணைகளை நிறைவு செய்திருக்க வேண்டும் என்றும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விமானத்திற்குள் இருந்தாலும் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்றும், ரேண்டமாக 2 சதவீத பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், மாதிரிகளை கொடுத்துவிட்டு பயணிகள் செல்லாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments