ஆஸ்திரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி பிக்ரம்ஜித் சிங்கை கைது செய்த NIA அதிகாரிகள்..!

0 2224

ஆஸ்திரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி பிக்ரம்ஜித் சிங்கை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்தனர்.

பஞ்சாபில் நிகழ்ந்த சில தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி பிக்ரம்ஜித் சிங்கை இன்டர்போல் அதிகாரிகள் உதவியுடன் ஆஸ்திரியாவில் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் குழு ஒன்று ஆஸ்திரியா சென்றது. அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் வாயிலாக பிக்ரம்ஜித் சிங் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்தையடுத்து  என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments