பொன்னியம்மன் மேடு பகுதியில் மதரஸாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 குழந்தைகள் மீட்பு.!

0 1599

மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் உள்ள மதரஸாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமான தழும்புகள் பதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments