காட்டுப்பன்றி வராமல் தடுப்பதற்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி, மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

0 679

தேனி மாவட்டம் தேவாரம் அருகே, காட்டுப்பன்றி வராமல் தடுப்பதற்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய இளைஞர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

பதினெட்டாம் கால்வாய் மேற்கு பகுதியில், விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க, உரிய அனுமதி பெறாமல் உயரழுத்த மின்சார கம்பிகளில் இருந்து மின்சாரம் எடுத்து விவசாயிகள் மின்வேலி அமைத்துள்ளனர்.

இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வேலியில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு வேலை பார்த்த சூரியபிரகாஷ், பக்கத்து நிலத்தில் இருந்த மின்வேலியில் கால் வைத்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments