சாலை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட தகராறு... தொழிலாளர்களை அரிவாளால் வெட்டிய முதியவர்
தஞ்சாவூர் அருகே சாலை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட தகராறில், முதியவர் ஒருவர், இரண்டு தொழிலாளர்களை அரிவாளால் வெட்டிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கள்ள பெரம்பூரில் வசிக்கும் 85 வயதான துரை மாணிக்கம் என்ற முதியவரின் வீட்டு வாசல் வரை, தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முதியவர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முதியவர் அரிவாளால் தாக்கியதில் இரு தொழிலாளர்களும் பலத்த காயமடைந்தனர். புகாரின் பேரில், முதியவரை கைது செய்த போலீசார், பின்னர் ((வயது மூப்பு காரணமாக)) ஜாமீனில் விடுவித்தனர்.
Comments