இந்த ஆண்டின் பயிர் காப்பீட்டுத்தொகையை தமிழக அரசே செலுத்தவேண்டும் - எடப்பாடி பழனிசாமி

இந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பயிர் காப்பீட்டிற்கான கடைசி நாள் நவம்பர் 15 ந்தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான கால அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகாரிகள் விவசாயிகளை சந்தித்து, அவர்களது நிலங்களை, காப்பீட்டு திட்டத்தில் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது பெய்துவரும் மழையினால் தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments