மின்கட்டண உயர்வு கண்டித்து ஏராளமான வாகனங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கைது..!

தமிழகத்தில், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சார்பில் விருதுநகரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த டாக்டர் கிருஷ்ணசாமியை, மதுரை வலையங்குளம் சுங்கச்சாவடி அருகே போலீசார் கைது செய்தனர்.
அதிக வாகனங்களில் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்ததை மீறியதாக, கிருஷ்ணசாமி மற்றும் அவரது கட்சியினரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
Comments